விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்தவுடன் தேசிய நெடுஞ்சாலை 45ல் இடதுபுறம் திரும்பி நகரை நோக்கி செல்லவும். மீனம்பாக்கம் , இராணுவ அலுவலர் பயிற்சி மையம், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை மற்றும் நந்தனத்தை கடந்த பிறகு ஜெமினி மேம்பாலத்தில் வலது பக்கம் திரும்பி டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் ஹோட்டல் சோழா ஷெரட்டான் வரை சென்று இடது பக்கம் திரும்பி கான்ரான்ஸ்மித் சாலையில் செல்லவும்.
காவலர் குடியிருப்புக்கு அடுத்த கட்டிடத்தில் சென்னை மெட்ரோ இரயில் அலுவலகம் இயங்குகிறது.
கிடைக்கக் கூடிய போக்குவரத்து வசதிகள்:
டாக்சி, ப்ரீ பெய்டு ஆட்டோக்கள், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள்.
சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் இடதுபுறம் திரும்பி அந்த சாலை இறுதி வரை சென்று சிக்னலில் வலதுபுறம் திரும்பி தீவுத்திடலில் இராணுவ தலைமை அலுவலக பகுதி, மன்றோ சிலையைக் கடந்த பிறகு அண்ணா சாலையில் இணையவும்.
எல்.ஐ.சி கட்டிடம், ஆயிரம் விளக்கு பகுதிகளை கடந்த பிறகு, இடது புறம் பீட்டர்ஸ் சாலையில் திரும்பவும்.
அடுத்து வரும் வலது பக்கம் திருப்பத்தில் திரும்பி, கான்ரான்ஸ்மித் சாலையில் பயணிக்கவும். அச்சாலையில் M.W.A. மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு அடுத்த கட்டிடத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.
கிடைக்கக் கூடிய போக்குவரத்து வசதிகள்:
டாக்சி, ப்ரீ பெய்டு ஆட்டோக்கள், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள்.
எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்த பிறகு, சாலையை கடந்து கென்னட் லெனின் கடைசி வரை சென்று பாந்தியன் சாலைக்குச் செல்ல வலதுபுறம் திரும்பி ரவுண்டானா, மேம்பாலம், கோ-ஆப்டெக்ஸ் தாண்டி க்ரீம்ஸ் சாலையில் செல்வதற்கு இடது புறம் திரும்பவும்.
அண்ணா சாலையில் இணைய க்ரீம்ஸ் சாலையில் கடைசி வரை செல்லவும்.
அண்ணா சாலையில் இணைந்து ஆயிரம்விளக்கு மசூதி வரை சென்று இடது புறம் பீட்டர்ஸ் சாலையில் திரும்பவும்.
அடுத்து வரும் வலது பக்கம் திருப்பத்தில் திரும்பி, கான்ரான்ஸ்மித் சாலையில் பயணிக்கவும்.
அச்சாலையில் M.W.A. மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு அடுத்த கட்டிடத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.
கிடைக்கக் கூடிய போக்குவரத்து வசதிகள்:
ஆட்டோ ரிக்ஷா, சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள்.